முகமூடி களைவோம்

புன்னகைத்து வரும் எத்தனையோ
முகங்கள்
புலிகளின்
பற்களாய் இன்று
கடித்து குதற நினைக்கிறது !

விலாசமற்று வரும் எத்தனையோ
பெயர்கள்
அனாமேதய
ஐடி எனும் பற்களால்
கவிதைகளை கடித்துக் குதறுவதேன் ?

விருப்பமாய் வரும் எத்தனையோ
தோழர்கள்
சுகமான
கருத்துக்களை
சுபீட்சமாய்
சொல்கையிலே வண்ண வண்ண கனவுகளூருது

கற்பனை சுமந்து வரும் எத்தனையோ
கவிதைகளை
கழிந்து போன
விலங்கு மலமாய்
முகத்திலடித்து
முகமூடி கலையா வேந்தனாவது தகுமா ?

களமமைக்கும் இந்த தளத்தில் எத்தனையோ
அன்பர்கள்
நண்பர்கள்
கவிஞர்கள்
இவர்கள் வாய் குளிர
வாழ்த்து எடுத்தல் தகாமல் போகுமோ ?

எழுதியவர் : இமாம் (22-Jan-14, 8:01 pm)
பார்வை : 758

மேலே