புத்தகம்
புரட்டினால் புரியும் புதுவரி
திரட்டினால் உனக்கு தித்திப்பு
மனத்தில் தோன்றா மகத்துவமும்
மனக்கண் முன்னே நிற்குமே...
அமுதசுரபி போலவே
முடிவுமிதற்கு இல்லையே...
எல்லையில்லா சொற்களும்
ஏராளமாய் அறியலாம். ..
படித்து நீயும் பழகினால்
பண்புகளும் வளருமே....
முகவரியும் இல்லையே
முற்றுப்புள்ளி வைத்திடாய்...
முயன்று நீயும் கற்பதால்
முன்னேறுவாய் வாழ்வினில்..!