விழித்திடு
வேதனை என்று
விழிகளை மூடினால்
நிம்மதி பிறக்காது தோழா!
சாதனை செய்து
சரித்திரம் படைக்கத்
துணிவின்றி கிடப்பதுன் தோளா !
நன்றதைச் செய்திட
நாளுந்தான் முயலுணும்
நடுக்கத்தை நீஇனி விட்டிடு!
வென்றிடும் நேரந்தான்
வந்திடும் என்றெண்ணி
நெஞ்சத்துப் பயந்தனைக் கொட்டிடு!
ஏழைகள் நாட்டினில்
எங்கிடும் நிலையது
ஒழிந்திட வேண்டுமே வாளெடு !
கோழைகள் நிமிரணும்
கொடுமைகள் மறையணும்
கோபத்தில் சிவந்திடும் விழியெடு!
பண்பினை இழந்தொரு
பாதகம் செய்திடும்
பதர்களின் செயலினை அழித்திடு!
புண்பட்ட மாந்தரை
பரிவுடன் மாற்றிடும்
பக்குவ உணர்வுடன் விழித்திடு!
********************