புரியாத புதிர்

எழுத்துச் சாளரங்களின் வழியே
என்ன எதிர் பார்க்கிறாய் தோழி
பாண்டியன் தீர்ப்பு போல
பரிசுக் குழுவும் நெறி பிறழ்கிறது .
நான் எழுதியது கவிதையுமில்லை
அதில் கற்பனையும் இல்லை
பரிசுக் குழுவினர் பரிசு தந்தார்கள்
நான் என் பேனா முனையை சிதைத்து
மூங்கில் குழலில் முகாரி ராகம் பாடுகிறேன்..
சங்கம் வளர்த்த தமிழ்
சரிந்து போவது கண்டு
அங்கம் குலுங்க அழுகிறேன்.

எழுதியவர் : சுசீந்திரன் (7-Feb-14, 8:14 pm)
Tanglish : puriyaatha puthir
பார்வை : 205

மேலே