சித அருணாசலம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சித அருணாசலம்
இடம்
பிறந்த தேதி :  19-Aug-1962
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Feb-2013
பார்த்தவர்கள்:  133
புள்ளி:  19

என் படைப்புகள்
சித அருணாசலம் செய்திகள்
சித அருணாசலம் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2019 3:02 pm

சிலையில் உழைப்பைக் கழித்தால்
கல் தான் மிஞ்சும்.
சேலையில் உழைப்பைக் கழித்தால்
நூல் தான் மிஞ்சும்.
மாலையில் உழைப்பைக் கழித்தால்
மலர் தான் மிஞ்சும்.
சோலையில் உழைப்பைக் கழித்தால்
செடியும், மரமும் மிஞ்சும்.
வாழ்க்கையில் உழைப்பைக் கழித்தால்
நோய் தான் மிஞ்சும்.
உழைப்பவனுக்கு ஊதியம் குறைத்தால்
உலகத்தில் உபத்திரவம் மிஞ்சும்
ஊதியம் மறுத்தால்
உலகமே நாறிப்போய் விடும்.

மேலும்

சித அருணாசலம் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2019 2:13 pm

அண்ணே, வீட்டுக்காரிக்கும், ஆட்டக்காரிக்கும் என்னண்ணே வித்தியாசம்.

டே! ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி. அவ பாட்டுக்கு ஆடுனா அது வீட்டுக்காரிடா

மேலும்

சித அருணாசலம் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2019 2:03 pm

கழுவி ஊத்திட்டு காபி குடுத்தா அது டீ கடை

காபி குடுத்துட்டு கழுவி ஊத்துனா அது கம்பெனி மீட்டிங்.

மேலும்

சித அருணாசலம் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2019 1:57 pm

"ஹலோ சைக்கியாட்ரிஸ்டுங்களா?"

"ஆமாங்க"

"கல்யாணம் ஆனதிலிருந்தே என் மனைவி எங்கிட்டப் பேசவே மாட்டேங்கறா. நான் என்ன செய்யறேன் எங்க போறேன்னு ஒரு வார்த்தை கூடக் கேட்க மாட்டேங்கறா. கம்முன்னு இருக்கா. என்ன செய்ய டாக்டர்?"

"நீங்க எங்க இருக்கீங்க?"

"தென்காசியில் டாக்டர்"

"நேராக் காசி விஸ்வநாதர் கோவிலுக்குப் போங்க"

"சரி டாக்டர்! அப்பறம்...."

"நூத்தி எட்டு தேங்காய் ஒடைங்க"

"அப்பறம் சரியாயிடுமா டாக்டர்"

"கடவுளே இப்படி ஒரு மனைவி அமைஞ்சதுக்கு உனக்கு ஆயிரம் நன்றின்னு சொல்லி வேலையைப் பாத்திட்டுப் போய்கிட்டே இருங்க"

மேலும்

சித அருணாசலம் - மங்காத்தா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jul-2013 9:54 am

திராவிடம் பிறந்தது ஆரிய வெறுப்பில்
அரசியல் ஆதாயம் தேடி வந்தது
திராவிட பிறப்பு

திராவிடம் இன்று தனித்து விடப்பட்டு
தமிழாய் நிற்கிறது
தமிழையும் ஏற்க மறுத்து
திராவிடம் தவித்து நிற்கிறது

திராவிடம் தோன்றியது கடவுள் மறுப்பில்
இல்லாத கடவுளை மறுப்பதிலேயே பிறந்து
வளர்ந்தது கொள்கை குழப்பம்

கடவுளை மறுத்த பின்பு
தமிழை எப்படி ஏற்பது?

தமிழ் இலக்கியம் அனைத்தும்
கடவுள் புகழ் பாடுகின்றன
தமிழின் கடவுள் முருகன் என்கின்றன

சைவ இலக்கியம். வைணவ இலக்கியம்
கம்ப இலக்கியம் அனைத்துமே
பக்தி மயமாய் போய் அல்லவோ
தமிழை வளர்த்துள்ளன

பிறகு எப்படி தமிழை நெருங்குவது
கடவுளை மறுத்து விட்டு?

அப

மேலும்

கட்டுரை போல இருக்கிறது 23-Apr-2019 12:59 pm
திராவிடம் இயக்கம் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டதை மறக்கமுடியாது. நீங்கள் சொல்வதைப் போல பின்னர் திசைமாறிப் போய்விட்டது. ம்லையாளிகள் தெலுங்கர்கள் கன்னடர்கள் தமிழை முழுமையக ஒதுக்கிவிட்டு அவர்கள் மொழியைப் ப்யன்படுத்த முடியாது. எனினும் சமஸ்கிருததிடம் காட்டும்நெருக்கத்தை அவர்கள் தமிழிடம் காட்டுவதில்லை. ஒரு கால்த்தில் மொழி வளர்ச்சிக்கு உதவிய ஊடகங்கள் இன்று மொழியைச் சிதைப்பில் முனைப்போடு செயல்படுகின்றன. தேவையற்ற கடவுள் ம்றுப்பு, வெளிப்படையான பிராமண எதிர்ப்புக்கள் தமிழர்களைத் தனிமைப் படுத்திவிட்டது. இந்தி எதிர்ப்பையும் தவிர்த்திருக்க வேண்டும். 17-Jun-2014 7:35 am
சபாஸ் !சக்கைப்போடு !களைகட்டுகிறது தளம் !விளையாட்டும் விளையட்டும்!விவாதங்கள் பறக்கட்டும் ! சபை கூடட்டும் ! நியாயங்கள் பேசட்டும் !நல்லது பிறக்கட்டும்!வளரும் தெளிவுகளை வணங்கி வரவேற்போம் !நன்றி! 02-Aug-2013 5:27 pm
வருகையால் மகிழ்ச்சியே. கருத்துக்கும் பார்வைக்கும் நன்றிகள். 02-Aug-2013 3:41 pm
சித அருணாசலம் - சித அருணாசலம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Mar-2014 8:48 am

அதிகம் மதிப்பெண் பெறாத
ஆறாம் வகுப்பு மாணவனின்
அங்கலாய்ப்பு.
ஆப்பிளுக்குப் பதிலாக
அந்த மரத்தின் கிளைகளில் ஒன்று
விழுந்திருந்தால்…
அறிவியல் கொஞ்சம்
எளிதாக இருந்திருக்குமோ!

மேலும்

நன்றி குமரிப்பையன் 04-May-2016 11:10 pm
சிந்தனை சிறப்பு..! 15-Mar-2014 9:28 pm
சித அருணாசலம் - சித அருணாசலம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Apr-2016 9:26 am

தீப்பெட்டிக்குள் புதைந்த வாழ்க்கை!

கைகளில் கந்தகம்,
கனவுகளில் புத்தகம்.
பற்ற வைத்தால்
பிரகாசிக்கும் மத்தாப்பு
இவர்களுக்கு மட்டும்
இருளாகிப் போகிறது.
சூரியனைப் பார்த்துப்
பல நாட்களாகி விட்ட
பரிதாபமான வாழ்க்கை
புதிராகி வளர்கிறது.
புத்தகப் பெட்டிக்குள்
அறிவைத் தேடுவதெல்லாம்
அறியாததாகி விட
தீப்பெட்டிக்குள் புதைந்து
திக்குத் தெரியாமல்
திண்டாடுகிறது வாழ்க்கை.

மேலும்

நன்றி ராஜேந்திரன்! 04-May-2016 11:11 pm
பாவப்பட்டவர்கள் இந்த சிறுபிஞ்சுகள்.அவர்கள் வாழ்க்கை மாறட்டும் 29-Apr-2016 10:21 pm
நன்றி முகம்மது சர்பான் 25-Apr-2016 3:02 pm
எரியும் நிலையில் மனதின் உள்ளுணர்வுகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Apr-2016 8:10 am
சித அருணாசலம் - சித அருணாசலம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Mar-2014 1:34 pm

காட்சிகளை,
நிழலான புகைப்படக் கருவியால்
நிஜமான கவிதைகளாக்கியவர்.

அழகுக்கான
புது இலக்கணத்தை
அடுத்தடுத்துக் காட்டியவர்.

ஆரவாரமில்லாமல்
புயலை உருவாக்கி
அமைதியாய் வலம் வந்தவர்.

அறிமுகங்கள் எல்லாம்
அனுபவம் பெறுமளவு
படைப்புகள் காவியங்கள் ஆனது.

ஒளிப்பதிவும்,
உழைப்பின் பதிவும்
உயரத்திற்குக் கொண்டு போனது.

தேசிய விருது
தேடி வந்ததால்
தன்னைப் புடம் போட்டுக் கொண்டது.

’நெல்லால்’ விளைந்தவர்,
நிறைவாய்த் ‘தலைமுறைகள்’
வளர்ச்சிக்கு வழிகாட்டியவர்.

மேலும்

பாராட்டுக்கு நன்றி 13-Mar-2014 8:32 pm
நன்று 13-Mar-2014 5:29 pm
நன்று! 13-Mar-2014 4:21 pm
சிறப்பு கவிதை அருமை. 13-Mar-2014 4:06 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கார்த்திக்

கார்த்திக்

திருநெல்வேலி
sarabass

sarabass

trichy

இவர் பின்தொடர்பவர்கள் (4)

கார்த்திக்

கார்த்திக்

திருநெல்வேலி
sarabass

sarabass

trichy
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (4)

sarabass

sarabass

trichy
கார்த்திக்

கார்த்திக்

திருநெல்வேலி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே