தீப்பெட்டிக்குள் புதைந்த வாழ்க்கை

தீப்பெட்டிக்குள் புதைந்த வாழ்க்கை!

கைகளில் கந்தகம்,
கனவுகளில் புத்தகம்.
பற்ற வைத்தால்
பிரகாசிக்கும் மத்தாப்பு
இவர்களுக்கு மட்டும்
இருளாகிப் போகிறது.
சூரியனைப் பார்த்துப்
பல நாட்களாகி விட்ட
பரிதாபமான வாழ்க்கை
புதிராகி வளர்கிறது.
புத்தகப் பெட்டிக்குள்
அறிவைத் தேடுவதெல்லாம்
அறியாததாகி விட
தீப்பெட்டிக்குள் புதைந்து
திக்குத் தெரியாமல்
திண்டாடுகிறது வாழ்க்கை.

எழுதியவர் : சித. அருணாசலம் (24-Apr-16, 9:26 am)
பார்வை : 110

மேலே