சுற்றுவது நல்லது
சுற்றுலா செல்லுதல் சுகமானது
முற்றிலும் மனதிற்கு இதமானது
பெற்றிடும் அனுபவம் சுவையானது
சுற்றிடும் காலங்கள் நினைவானது
முறையான திட்டங்கள் வகுத்து
நிறைவான நட்புக்கள் சேர்த்து
குறைவான உணவுகள் உண்டு
சென்றிடும் சுற்றுலா சிறப்பு
வழிகாட்டி உதவுவோர் இருந்தால்
மொழிபேச புரிந்தவர் இருந்தால்
சுற்றுலா கொடுத்திடும் இன்பம்
இல்லையேல் வீணாக துன்பம்
புத்துணர்ச்சி விரும்புவோர் செல்வது
புதுக்காற்று சுவாசிப்போர் செல்வது
சத்தான மருந்தே சுற்றுலா
இதற்கில்லை நிகரேதும் வேறுலா