உழைப்பின் மேன்மை
சிலையில் உழைப்பைக் கழித்தால்
கல் தான் மிஞ்சும்.
சேலையில் உழைப்பைக் கழித்தால்
நூல் தான் மிஞ்சும்.
மாலையில் உழைப்பைக் கழித்தால்
மலர் தான் மிஞ்சும்.
சோலையில் உழைப்பைக் கழித்தால்
செடியும், மரமும் மிஞ்சும்.
வாழ்க்கையில் உழைப்பைக் கழித்தால்
நோய் தான் மிஞ்சும்.
உழைப்பவனுக்கு ஊதியம் குறைத்தால்
உலகத்தில் உபத்திரவம் மிஞ்சும்
ஊதியம் மறுத்தால்
உலகமே நாறிப்போய் விடும்.