திராவிடமும் தமிழும்

திராவிடம் பிறந்தது ஆரிய வெறுப்பில்
அரசியல் ஆதாயம் தேடி வந்தது
திராவிட பிறப்பு

திராவிடம் இன்று தனித்து விடப்பட்டு
தமிழாய் நிற்கிறது
தமிழையும் ஏற்க மறுத்து
திராவிடம் தவித்து நிற்கிறது

திராவிடம் தோன்றியது கடவுள் மறுப்பில்
இல்லாத கடவுளை மறுப்பதிலேயே பிறந்து
வளர்ந்தது கொள்கை குழப்பம்

கடவுளை மறுத்த பின்பு
தமிழை எப்படி ஏற்பது?

தமிழ் இலக்கியம் அனைத்தும்
கடவுள் புகழ் பாடுகின்றன
தமிழின் கடவுள் முருகன் என்கின்றன

சைவ இலக்கியம். வைணவ இலக்கியம்
கம்ப இலக்கியம் அனைத்துமே
பக்தி மயமாய் போய் அல்லவோ
தமிழை வளர்த்துள்ளன

பிறகு எப்படி தமிழை நெருங்குவது
கடவுளை மறுத்து விட்டு?

அப்படி என்றால்
திராவிடத் தமிழ் என்று எதைச்சொல்வது?

அங்காடி பதாதைகளும்
அரசின் அறிவிப்புகளும்தானே?

இலக்கியம் என்று எதைச் சொல்வது?
திரை வசனங்களும், திரை இசைப்பாடல்களும்,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும்தானே?
வேறு ஏது இலக்கியம்?

பிறகு எப்படி இந்த திராவிடத்தமிழுக்கு
தொன்மை தகுதி நிலை?

எது தமிழ்? எது திராவிடம்?

டாஸ்மாக்கே வழிவிடு!

எழுதியவர் : மங்காத்தா (1-Jul-13, 9:54 am)
பார்வை : 270

மேலே