திராவிடமும் தமிழும் -2

பகுத்தறிவில் பிறந்த திராவிடம்

பகுத்தறிவின் இலக்கணம் தேடுகிறது
இன்று

மூடநம்பிக்கைகளை அழிக்கத்தொடங்கி
திசைமாறி,

கடவுள் மறுப்புக் கொள்கைக்குத்தாவி
வடமொழி எதிர்ப்புக்கு ஓடி
தமிழ்மொழித்தூய்மைக்கு வந்து
திணறித் தவித்து

தான் வந்த திசைமறந்து
செய்வதறியாது திகைக்கிறது
திராவிடம்

பெண்ணடிமை ஒழிக்க புறப்பட்ட
பகுத்தறிவுவாதம்

செய்து முடித்தது அவளை
பொருளாதார அடிமையாக

இயந்திர உலகில் அவளை
சம்பளப் பணிக்கு அனுப்பி
சமையல் அடுப்பில் இருந்து
விலக்கி

நிரந்தர நிர்கதியில் விட்டது
நடுவாழ்வில்

உழைக்கிறாள் அவள் இன்று--

தனக்கும் தன் பிள்ளைகளுக்கும்
தன்னை சார்ந்தவர்களுக்கும்
அயராது,
சுதந்திரம் பெற்று,

திருமண பந்தத்தில் இருந்து
விடுதலை பெற்று,

வாழ்க்கை எதை நோக்கி
என்றே தெரியாமல்!

திராவிடமும் தமிழும் கைகோர்த்தது
பகுத்தறிவுவாதத்தில்---

பெற்றோர், கணவன், மகன் எனும்
பாச உறவுகளின் அரவணைப்பில்
சுகமாய் வாழ்ந்திருந்த
பண்பான தமிழ் பெண்ணை

அடிமையாய் சித்தரித்து

விடுதலை எனும் பெயரில்
அவளை
கொத்தடிமையாக்கிய பெருமையுடன்

அவளுக்கென்று இருந்த
அன்பு உறவுகளை
அவளுக்கே அந்நியமாக்கி

புதுமைப்பெண் முத்திரைகுத்தி
புளங்காகிதக் கொக்கரிப்புடன்

தமிழ் மட்டும் என்றுமே தாயாக,

திராவிடம் செய்யும்
அத்தனை கபடங்களையும்
பொறுமையாக பார்த்து
சிரித்துக் கொண்டு!

எழுதியவர் : மங்காத்தா (1-Jul-13, 12:57 pm)
பார்வை : 178

மேலே