ராஜராஜசோழன்

வானத்து மேகமாய் நகரும்
வாழ்க்கையில் வானமாய் நின்றவனே
வாழ்ந்ததோ சில ஆண்டுகள்- உன்புகழ்
வாழ்வதோ பல நூற்றாண்டுகள்
வாளெடுத்து நாடு பிடித்து
வசப்படுத்தினாய் மக்களை அன்பால்
விலங்கிடப்பட்டவனுக்கு உண்டு விடுதலை
அன்பால் அடைபட்டவனுக்கு உண்டோ விடுதலை
சதைப் பிண்டங்களே மண்ணில் மடியும்
மண்ணின் மைந்தர்கள் மரணிப்பதில்லை
நீ! மண்ணின் மைந்தன்...!!
அறிவிலா முண்டங்கள் பிதற்றும்
உன்பேரும் புகழ் கோவிலென்று- ஆனால்
உன்புகழ் நிலைக்கவே கோவிலென்று யார் அறிவார்!!
வீரத்திற்காக போற்றும் மன்னர்களுள்
திறமைக்காகவும் போற்றப்பட்டவன் நீ!
பாராளும் மன்னனாய் புகழ் பெற்றாய்
எனினும் தமிழ் மண்ணின் மரபால் மானமிழந்தாய்
மக்களை சுரண்டியவனுக்கு மரியாதை
யாராருக்கோ சிலைகள் மணிமண்டபங்கள்
தரணியை பார் புகழ்ந்திடச் செய்திட்ட உனக்கு
எங்காகினும் சிலையோ மண்டபமோ உண்டா...!
மானமிழந்தாய்! தமிழ்மகனே!!....தமிழனும்தான்...!!