boobathi kannathasan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : boobathi kannathasan |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 12-Apr-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Jul-2012 |
பார்த்தவர்கள் | : 345 |
புள்ளி | : 42 |
எது எல்லாம் உன்னை மிகவும் சந்தோஷப்படுத்துகின்றதோ அதற்கு நீ கண்டிப்பாக அடிமை ஆவாய்!!!...
ஆதியில்லா விண்வெளியின் கதவு திறந்திட
உப்பளக் காற்றில் உந்துசக்தியாய் பிறந்திட்ட
கனவுகளின் கனவு நாயகன் அப்துல்கலாம்
காலமெல்லாம் கலையாத விண்வெளி கனவு
மெய்ப்பட ராத்தரி கனவுகளை தொலைத்து
அறிவின் சுடரொளியில் ஆதவனாய் உதித்தவர்
இளமையின் துள்ளல்களை ஆக்கமாய் மாற்றி
ஊக்கமாய் உழைத்திடு முயற்சி வேள்வியில்
கனவு என்னும் தீமூட்டி கணைகளேற்று
மாணவப் பருவத்திலே அறிவொளி ஏற்றி
கனவுகளை விண்வெளி நோக்கி செலுத்து
புதுமுயற்சி விடாமுயற்சி அதுவே பயிற்சி
எண்ணம் மெழுகேற்றி வான்நோக்கி செலுத்து
வல்லரசாக பறந்திடு அக்னிச் சிறகுகளாய்
ஓ இளைஞனே! கனவைத் தேடு
இலட்சியமே உன் வாழக்கைக் கனவு
வரலாற்றுக் புத்தகத்தில் பெயர
ஆதியில்லா விண்வெளியின் கதவு திறந்திட
உப்பளக் காற்றில் உந்துசக்தியாய் பிறந்திட்ட
கனவுகளின் கனவு நாயகன் அப்துல்கலாம்
காலமெல்லாம் கலையாத விண்வெளி கனவு
மெய்ப்பட ராத்தரி கனவுகளை தொலைத்து
அறிவின் சுடரொளியில் ஆதவனாய் உதித்தவர்
இளமையின் துள்ளல்களை ஆக்கமாய் மாற்றி
ஊக்கமாய் உழைத்திடு முயற்சி வேள்வியில்
கனவு என்னும் தீமூட்டி கணைகளேற்று
மாணவப் பருவத்திலே அறிவொளி ஏற்றி
கனவுகளை விண்வெளி நோக்கி செலுத்து
புதுமுயற்சி விடாமுயற்சி அதுவே பயிற்சி
எண்ணம் மெழுகேற்றி வான்நோக்கி செலுத்து
வல்லரசாக பறந்திடு அக்னிச் சிறகுகளாய்
ஓ இளைஞனே! கனவைத் தேடு
இலட்சியமே உன் வாழக்கைக் கனவு
வரலாற்றுக் புத்தகத்தில் பெயர
கரியதோர் விழி செம்பொன்னிட்ட மேனி
கள்ளமில்லா குறுநகை மௌனமில்லா நிசப்தம்
கருணைக் கரங்கள் குதித்திடும் பிஞ்சுப்பாதம்
நளினமில்லா நடனம் மொழியில்லா பேச்சு
சிலநொடி உறக்கம் வருடும் வாஞ்சை
வசையில்லா நாக்கு பசையில்லா நெஞ்சம்
பகையில்லா கோபம் அளவிலா அன்பு
சலனமில்லா அசைவு மனமொத்த இசைவு
இவை கொண்டோர் குழந்தை என்போம்
அவர்கள் எங்கள் தெய்வம் என்பேன்...!!!
அத்தியாயம் - 2
இருமுகன்
மதிய வேளை . . .
சூரியன் தன் செந்நிறக் கதிர்களால் வெம்மையை பரப்பிக் கொண்டிருந்தான்.மூங்கில்கள் இல்லாத இடமே இல்லை என்று எண்ணும் அளவிற்கு மூங்கில்கள் எங்கும் திட்டுத் திட்டாக அடர்ந்து வளர்ந்திருந்தன. கொன்றை மரங்களும், புன்னை மற்றும் வேங்கை மரங்களும் தன்னுடைய இலைகளை தரையில் பரப்பி வைத்திருந்தன. சூரியன் அதன் பச்சையை உறிஞ்சிக் குடித்ததில் பழுப்பேறிய இலைகள் சருகாகி தரையில் வீழ்ந்து கிடந்தன.. வெம்மை ஏறியிருந்த வனத்தில் காற்றானது மெல்ல ஊர்ந்து வந்து தரையில் கிடந்த சருகுகளை சர்ரென்று நகர்த்திச் சென்றது.
காட்டில் விருட்சமொன்று நன்கு வளர்ந்திருந்தது. அது தன் கிளைகளை நாலாப்புறம
அனைவருக்கும் வணக்கம்..!! எனது நெடுநாளைய கனவு மற்றும் முயற்சியாக இருந்த வெள்ளியங்கிரி பற்றிய புதினம் ஒன்றை எழுத துவங்கியுள்ளேன். அதன் முதல் அத்தியாயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன். எந்தவகையான கருத்துக்களையும் பின்னூட்டமாக பதிவு செய்தால் எனக்கு அது பயனளிக்கும்.இதோ முதல் அத்தியாயம்
முழுமுதலோன் (அத்தியாயம் 1)
அதிகாலைப் பனிக்காற்று மெல்லியதாக மேலெழும்பி சில்லென விசும்பத் துவங்கியிருந்தது. கதிரவன் இன்னும் தூக்கம் கலையாதவன் போல மங்கலாக ஒளிரத் துவங்கியிருந்தான். மேகங்கள் மலைமுகடுகளில் வெள்ளிப் போர்வைபோல படிந்திருந்தன. பட்சிகள் குதூகலமாக முணுமுணுத்துக் கொண்டே பறந்து கொண்டிருந்தன. இரவு கொளுத்திய
மாணவர்களின் அறிவுக்கும்(knowledge) மதிப்பெண்-க்கும்(mark) ஏதேனும் சம்பந்தம் இருக்கா?
கல்வி நிலையங்களில் மாணவர்களை மதிப்பெண்ணை வைத்து பிரிக்கிறார்களே அது சரியா?
நான் தினமும் பண்ணுவேன் ஈ.சி
என் லவ்வர் பேரு ரோஸி
பத்து ரூபாயிலிருந்து டாப் - அப்
உனக்கு போதுமாடி இந்த மேக் -அப்
கம்பெனி செல்- ன்னா அது நோக்கியா
நாம ரெண்டு பேரும் போவோமா டோக்கியா ..!
ஸ்லிம் -ஆ இருக்குமே சாம்சங்
உன் அழகுல தோத்துருவா அந்த சாயாசிங்..!
பட்ஜெட் -க்கு ஏத்தாப்போல லாவா
நீ தாண்டி என் மல்கோவா...!
லோவேஸ்ட் ப்ரைஸ்(lowest price ) -ன்னா அது சைனா செட்
ப்லொவ்(flow ) -ஆ நம்ம லவ் செட் ...!
விக்காம இருக்குதடி வீடியோகான்
விக்கல் வந்த என் வீடியோவை காண்...!
சூப்பர் -ஆ இருக்குதடி சோனி எரிக்சன்
ஸ்வீட் -ஆ போகுதடி நம்ம கனைக்சன் ...!
மொப
அறிவில்லாமல் தெளிவில்லாமல் நான் பாடுகிறேன் என்னதான் பாடுவதோ!!
அவள்தான் சிறந்த கவிதை என்று பாடுவதா
அட இங்கும் அவளா வேண்டாம் வேண்டாம்!!!
வேறென்னதான் பாடுவதோ!!!
அவளையன்றி வேறேதும் தெரியாத அறிவிலி நான்
எதைத்தான் பாடுவதோ!!
அழகுமயில் எனகள்ளித் தந்த வேதனைகளின்
முற்றில்லா முடிவிலிகளை பாடுவதோ!!
அவள் எனக்களித்த வரங்களை(வலிகளை) பாடுவதோ!!
ஏதும் அறியாத பிள்ளையாய் அழும் என்மனதை பற்றி
பாடுவதோ!!
கவியாய் போக சபித்த என் காதலைத்தான் பாடுவதோ!!
திட்டி தீர்க்கலாம் என்றாலும் வேண்டாம் என்று தீர்க்கமாய் சொல்லும் என் மூடமதியை பாடுவதோ!!
கடந்தகால மேகங்கள் இன்னும் கரைகடக்காமல் கண்ணில்
கரை உடை