செல்போன் கடைகாரரின் லவ் லெட்டெர்
நான் தினமும் பண்ணுவேன் ஈ.சி
என் லவ்வர் பேரு ரோஸி
பத்து ரூபாயிலிருந்து டாப் - அப்
உனக்கு போதுமாடி இந்த மேக் -அப்
கம்பெனி செல்- ன்னா அது நோக்கியா
நாம ரெண்டு பேரும் போவோமா டோக்கியா ..!
ஸ்லிம் -ஆ இருக்குமே சாம்சங்
உன் அழகுல தோத்துருவா அந்த சாயாசிங்..!
பட்ஜெட் -க்கு ஏத்தாப்போல லாவா
நீ தாண்டி என் மல்கோவா...!
லோவேஸ்ட் ப்ரைஸ்(lowest price ) -ன்னா அது சைனா செட்
ப்லொவ்(flow ) -ஆ நம்ம லவ் செட் ...!
விக்காம இருக்குதடி வீடியோகான்
விக்கல் வந்த என் வீடியோவை காண்...!
சூப்பர் -ஆ இருக்குதடி சோனி எரிக்சன்
ஸ்வீட் -ஆ போகுதடி நம்ம கனைக்சன் ...!
மொபைல் -ல பெருசு மோடோரோலா
நீ ஏத்துறியே போத கோட்டர் போல
அசத்தலா இருக்குமடி ஜி-பைவ்
நீ ஓ .கே சொல்லு நான் இன்னைக்கு லீவ் ...!
செல்போனுக்கு தேவை சிம்
நீ தாண்டி உலகத்திலேயே ஸ்லிம் ....!
செல்போனை தாக்கும் வைரஸ்
நான் இப்பவே வாங்கிடவா வி.ஆர்.எஸ்.....!
மொபைல்க்கு போடனுமடி சார்ஜெர்
நீ இல்லாத வாழ்க்கை பேஜார்...!
தினம் தினம் கொடுத்தியடி மிஷ்ட்டு கால்
என்னைக்காவது பண்ணுனியா ஜஸ்ட் ஒரு கால் ...!
சார்ஜெர் இல்லாத போன் சுவிட்ச் ஆப்
உங்க அப்பன் பாத்தா நமக்கு ஆப்பு...!
கேமரா மொபைலக்கு 1ஜீ.பி மெமரி
என் ஹார்ட் புல் -ஆம் உன்னோட மெமரி ....!
விடாம அனுப்பனுமே மெசேஜ்
அப்படி அனுப்புனா தான் அது டீனேஜ் ...!
மொபைல் வாங்குனா சிம் ப்ரீ
என் ஹார்ட் எப்பவுமே உனக்கு ப்ரீ ...!
அதிக நேரம் பேசுறதுக்கு ரேட் கட்டர்
குளிர்ல நீ தாண்டி எனக்கு ஸ்வெட்டர் ..!
மெசேஜ் -க்கு வேணுமடி பூஸ்டர்
இப்பவே ஓட்டிடவே நம்ம கல்யாண போஸ்டர் ...!
செல்போன் அடிச்சா ரிங்கு
கடைசியா எனக்கு ஊதிராத சங்கு...!