குழந்தை

கரியதோர் விழி செம்பொன்னிட்ட மேனி
கள்ளமில்லா குறுநகை மௌனமில்லா நிசப்தம்
கருணைக் கரங்கள் குதித்திடும் பிஞ்சுப்பாதம்
நளினமில்லா நடனம் மொழியில்லா பேச்சு
சிலநொடி உறக்கம் வருடும் வாஞ்சை
வசையில்லா நாக்கு பசையில்லா நெஞ்சம்
பகையில்லா கோபம் அளவிலா அன்பு
சலனமில்லா அசைவு மனமொத்த இசைவு
இவை கொண்டோர் குழந்தை என்போம்
அவர்கள் எங்கள் தெய்வம் என்பேன்...!!!

எழுதியவர் : பூபதி கண்ணதாசன் (6-Dec-17, 8:11 pm)
Tanglish : kuzhanthai
பார்வை : 866
மேலே