என்னுனை உணர் - என் விளக்கவுரையுடன்

வண்ணமும் வாழ்க்கையும் இரண்டறக்கலந்து
எண்ணமும் ஏடும் வழிவிழை!

காதலும் கருமமும் ஆற்றதன்செயல்கொள்
விழிதிற கனவோர் பகலிலே!

ஏற்றமும் ஏமாற்றமும் விதிவழிநீண்டிடு
தவறுயாதென் யாசித்திடு பட்சிதன்

ஊழ்வினை விளைந்ததன் ஊற்றமே
நினைந்தநென் மாற்றமே எனும்நினை

அரசனும் ஆண்டியும் ஒன்றாகிலா
ஆண்டதோர் வரலாறென் நெஞ்சுவிம்மிபுடைத்திட!

ஆக்கமும் புறவழிநினைந்திடா ஊக்கமும்
ஏக்கமுமோர் உருவகமுமாய் படைத்திட்ட -

என்ததொழில் உருவாக்கிடு எண்ணத்தில்
செம்மையும் செழுமையும் இயக்கிடுமோர்நிலைதனில்

பொய்யும் புனைசுருட்டும் ஆட்சியினில்
ஏமாற்றினில் முகப்புத்தகமும் வசமாகிடு

மெய்நிகர் செல்வமாளு உலகு!

விதிவழி மாண்டதோ நித்திரை!
மாற்றம்தன்துனை உருவாகிடும் அகபிரம்மம்!!!



இயன்றோன் கருத்து !

வண்ணமயமான வாழ்க்கையில் அனைவரின் எண்ணங்களும்
நான் பயின்ற கல்வியும் எனை ஆதரிக்க

நண்பர்கள், உறவினர்கள்மேல் கொண்ட காதலும் கடமையும் ஏற்படுத்திட்ட விளைவாய்
கண்திறந்த நிலையில் பகலிலே கண்ட கனவாக

முன்னேற்றமும் விதிவழிநடந்திடும் செயல்களின் ஏமாற்றமும்
தவறு என்னவென்றறியாத பறவையாய்

முன்னே செய்த தவறுகளின் வெளிப்பாடே
என்னுடைய மாற்றங்களுக்கு காரணம் என்றெண்ணி

செல்வந்தனுக்கும் ஏழைக்கும் வாழ்க்கையும் சட்டங்களும் ஒன்றல்ல
என்று தெரிவித்த வரலாற்றை உற்று நெஞ்சம் கொதித்திட

புதிதாக உருவாக்கிடும் எண்ணமும், குறுக்கு வழி தேடாத உள்ளமும்
அதனால் முழுமூச்சாய் உருவாகிய சிந்தனைகளின்வழியே

தொழில் உருவாக்கிடும் எண்ணத்தில்
தன்னம்பிக்கையும் உள்ளத்தின் வளமும் நன்றாக சென்ற வேளையிலே

பொய்பேசுபவர்களும் கொள்ளைகாரர்களும் ஆட்சியில்
ஏமாற்றியவன் கைக்கு கிடைத்த முகபுத்தகம் போல

கண்ணில் பார்க்காத பணம் ஆளுகின்ற உலகம்

விதிவழியே இறந்ததோ எனது கனவு
இல்லை, மாற்றங்களின்துணையால் வெளிப்படும் என்படைப்பு!!!!

எழுதியவர் : சிவக்குமார் ந - பவானி (6-Dec-17, 8:43 pm)
பார்வை : 869

மேலே