ஆம் நாங்கள் அப்படித்தான்

மெதுவாய் சுழன்றது பூமி
சட்டென சுழல் காற்று
விழுந்தன மரங்கள்
பீய்ந்தது ஓலை
கூவத்தில்
கூரை

தூரத்தில்
குழந்தையின் குரல்
நஞ்சுண்ட பயம்-தன்
நெஞ்சுண்டது

கோரமாக்கும் புயலுக்குத் தெரியுமா
வருமையின் கோரம்
"வறுமைக்குக் காரணம் நீ
வாழ உனக்கு தெரியல"-என்ற
வசை ஓசைகள் காதில்
இசை பாடியது

வசைக்கும் இசைக்கும்
வித்தியாசம் தெரியாது-ஆம்
எருமையின் வண்ணம் மட்டும்
எங்களுது அல்ல
எருமையின் குணமும்
எங்களது தான்

ஆம் மீண்டும்
கூவத்தில் தான் கூரையிடுவோம்

ஏஜமானுக்கு அடிமையின்னு
அடிமனசுல பதியவச்சு
தலைமுறை கடந்து எங்க
வாயிலே சொல்ல வெச்சு

வாழ்க்கையெல்லாம் சுரண்டப்பட்டு
வழிகளெல்லாம் மறுக்கப்பட்ட எங்களுக்கு
இடம் தந்ததும்
வாழ வழி தந்ததும் இதுதான்

ஒருநாள் இந்த நதிக்கரை
நாகரிகம்
வளரமல் போகாது

-கோராத

எழுதியவர் : கோரா.தணிகைமணி (6-Dec-17, 6:26 pm)
பார்வை : 1103

மேலே