கலாமின் கனவு

ஆதியில்லா விண்வெளியின் கதவு திறந்திட
உப்பளக் காற்றில் உந்துசக்தியாய் பிறந்திட்ட
கனவுகளின் கனவு நாயகன் அப்துல்கலாம்
காலமெல்லாம் கலையாத விண்வெளி கனவு
மெய்ப்பட ராத்தரி கனவுகளை தொலைத்து
அறிவின் சுடரொளியில் ஆதவனாய் உதித்தவர்
இளமையின் துள்ளல்களை ஆக்கமாய் மாற்றி
ஊக்கமாய் உழைத்திடு முயற்சி வேள்வியில்
கனவு என்னும் தீமூட்டி கணைகளேற்று
மாணவப் பருவத்திலே அறிவொளி ஏற்றி
கனவுகளை விண்வெளி நோக்கி செலுத்து
புதுமுயற்சி விடாமுயற்சி அதுவே பயிற்சி
எண்ணம் மெழுகேற்றி வான்நோக்கி செலுத்து
வல்லரசாக பறந்திடு அக்னிச் சிறகுகளாய்
ஓ இளைஞனே! கனவைத் தேடு
இலட்சியமே உன் வாழக்கைக் கனவு
வரலாற்றுக் புத்தகத்தில் பெயரெழுதி வை
காற்றில் கலந்த கலாமின் மூச்சே
எம்முள் கரைந்து உலகை வசப்படுத்து
கனவே லட்சியம் கனவே அப்துல்கலாம்...!!

எழுதியவர் : பூபதி கண்ணதாசன் (6-Dec-17, 8:14 pm)
பார்வை : 477

சிறந்த கவிதைகள்

மேலே