நட்பு

தேன் தடவிய வார்த்தையில் இல்லை
கனவு காணும் கண்களில் இல்லை
மனம் மயக்கும் புகழ்ச்சியில் இல்லை
எனில்....................................................
அச்சம் போக்கும் ஆறுதலில்உண்டு
கஷ்டம் தீர்க்கும் பரிவினில் உண்டு
தைரியம் ஊட்டும் சொல்லில் உண்டு
தோள் கொடுக்கும் உரிமையில் உண்டு
துன்பம் பகிரும் துணிவில் உண்டு
நல்ல நட்பு ..............முழுநம்பிக்கையில் உண்டு

எழுதியவர் : ஸ்ரீமதி (8-Dec-17, 12:40 pm)
Tanglish : natpu
பார்வை : 441

மேலே