பிரேமம் படத்தின் கதை கவிதை வடிவில்

பீரேமம் காதல்
அன்று நான கண்டது ஒரு காரிகை
அவளைப் பார்த்தது இரண்டொரு நாழிகை
என் நெஞ்சில் ஒலித்ததோ பேரீகை
என உள்ளம் அடைந்ததோ உவகை
அக்கணம் முதல் நான் ரசித்தது இயற்கை
மற்றவை யாவும் எனக்கு ஆனது செயற்கை
அவளுக்காகக கட்டினேன் வெள்ளை மாளிகை
பிறர் அவளைப் பற்றிப் பேசினால் உண்டாவதோ பெரும்பகை
எனக்கு பிடித்ததோ அவள் புன்னகை
தினமும் எதிர்பார்ப்பது அவள் வருகை
அவள் பிம்பத்தை பதிவு செய்தது என் தூரிகை
வெளியிட முடிவு செய்தேன் காதல் அறிக்கை
கோரிக்கை இட்டே,ன் நீ தான் என் வாழ்வின் குல மங்கை
குறிப்பாய் உணர்த்தினாள், நான் வேறொருவனின் நங்கை
என் உடலும் உள்ளமும் சுழன்றது இவ்வுலகை
உடைந்ததோ, என் மாளிகையின் உப்பரிகை
நடுவில் வந்தாள், மற்றொரு மலர் மங்கை
மறுபடியும் என் வாழ்வில் ஒரு தாரகை
அவளும் என்னை நிராகரிக்க, தடுமாற வைத்தது இயற்கை
என்னை தேற்றியதோ நட்புச் சேர்க்கை
கடைசியில் உயிர் கொடுத்தாள், ஒரு தங்க மங்கை
அவள் தான், என் முதலாமவளின் தமக்கை
இனி அவளே என் தன்னம்பிக்கை
ஆரம்பித்தோம் இனிதே நல்வாழ்க்கை


ராரே

எழுதியவர் : ராரே (4-Dec-17, 6:55 pm)
பார்வை : 179

மேலே