இயல்வதுமில்லை

இயல்வதுமில்லை...!
16 / 09 / 2024
.
ஆறுதல் சொல்ல ஆளொன்று மில்லை
தேறுதல் சொல்லி தேற்றுவா ரில்லை.
தேடுதல் இன்றி வாழ்க்கையு மில்லை
தேடுதல் முடிவுதான் மரணத்தின் எல்லை

வீடு மனைவி சுற்றுங்கள் யாவும்
காடு வரைதான் இறுதி வரையில்லை
தேடி வைத்த சொத்துசுகம் யாவும்
பாடை வரைகூட தொடர்வது மில்லை

வெறுங்கையோடு வந்து வெறுங்கையோடு போவதுதான்
இந்த யாத்திரையின் மகத்தான சிறப்பு.
வந்தபின் இவ்வுலகே தன் கைக்குளென்று
பித்துப் பிடித்து அலைவதுதான் நம்பிறப்பு.

மறதியும் மரணமும் இல்லையெனில் வாழ்வின்
இறுதிவரை வெறும் குப்பைகளை சுமந்து
குருதி எல்லாம் சுண்டும்வரை நொந்து
இறுதியில் சாம்பலாகும் பூஜ்யம்தான் நம்வாழ்க்கை

இறையும் இயற்கையும் நம்மை கைவிடுவதுமில்லை
குறையும் குற்றமும் விட்டு ஒதுங்குவதுமில்லை
நிறைவும் நிம்மதியும் வாழ்வை நிறைப்பதுமில்லை
மறையும் தர்மமும் தொடர இயல்வதுமில்லை
.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (16-Sep-24, 8:59 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 37

புதிய படைப்புகள்

மேலே