என்னதான் பாடுவதோ
அறிவில்லாமல் தெளிவில்லாமல் நான் பாடுகிறேன் என்னதான் பாடுவதோ!!
அவள்தான் சிறந்த கவிதை என்று பாடுவதா
அட இங்கும் அவளா வேண்டாம் வேண்டாம்!!!
வேறென்னதான் பாடுவதோ!!!
அவளையன்றி வேறேதும் தெரியாத அறிவிலி நான்
எதைத்தான் பாடுவதோ!!
அழகுமயில் எனகள்ளித் தந்த வேதனைகளின்
முற்றில்லா முடிவிலிகளை பாடுவதோ!!
அவள் எனக்களித்த வரங்களை(வலிகளை) பாடுவதோ!!
ஏதும் அறியாத பிள்ளையாய் அழும் என்மனதை பற்றி
பாடுவதோ!!
கவியாய் போக சபித்த என் காதலைத்தான் பாடுவதோ!!
திட்டி தீர்க்கலாம் என்றாலும் வேண்டாம் என்று தீர்க்கமாய் சொல்லும் என் மூடமதியை பாடுவதோ!!
கடந்தகால மேகங்கள் இன்னும் கரைகடக்காமல் கண்ணில்
கரை உடைப்பதைப் பற்றி பாடுவதோ!!
இவ்வினாக்களுக்கு விடை எங்கு சென்றுதான் தேடுவதோ!!!!