வேண்டுதல்

"ஹலோ சைக்கியாட்ரிஸ்டுங்களா?"

"ஆமாங்க"

"கல்யாணம் ஆனதிலிருந்தே என் மனைவி எங்கிட்டப் பேசவே மாட்டேங்கறா. நான் என்ன செய்யறேன் எங்க போறேன்னு ஒரு வார்த்தை கூடக் கேட்க மாட்டேங்கறா. கம்முன்னு இருக்கா. என்ன செய்ய டாக்டர்?"

"நீங்க எங்க இருக்கீங்க?"

"தென்காசியில் டாக்டர்"

"நேராக் காசி விஸ்வநாதர் கோவிலுக்குப் போங்க"

"சரி டாக்டர்! அப்பறம்...."

"நூத்தி எட்டு தேங்காய் ஒடைங்க"

"அப்பறம் சரியாயிடுமா டாக்டர்"

"கடவுளே இப்படி ஒரு மனைவி அமைஞ்சதுக்கு உனக்கு ஆயிரம் நன்றின்னு சொல்லி வேலையைப் பாத்திட்டுப் போய்கிட்டே இருங்க"

எழுதியவர் : சித அருணாசலம் (23-Apr-19, 1:57 pm)
சேர்த்தது : சித அருணாசலம்
பார்வை : 70

சிறந்த நகைச்சுவைகள்

மேலே