ஜல்லிக்கட்டின் ஜாதகம்

உயிர்களின் வலிஅது என்மனதினை
ரணமாக்கிடுதே உங்களின் மனதும்
வலி உணர்ந்திடுமென அறிவேனே
உணர்வுகள் மதித்திடும் வீரமாந்தர்களே
தமிழர் மாண்பு காத்திட வாரீரோ....!!

தமிழரது பண்பாட்டு வீரம்
ஜல்லிகட்டு மறுப்பில் இன்று
தலைகுனிந்து போகுதென்று
சீறி பாயும் அன்பர்களே கேட்பீரோ...!!

அன்று திடம் பொருந்தி மக்களிருக்க
மன்னன் பொழுததை களிப்புடனே கண்டு
மகிழ வீரனின் துணிச்சலை அங்கு
தூண்டிவிட்ட சாகசமே ஜல்லிகட்டு...!!

அன்று நாட்டைகாக்கும் ஜாம்பவானின்
வீரமதை ஏழை அவன் காளை கொண்டு
தூண்டுவதால் ஏழை வறுமைதீர
ஏற்ற செல்வம் மன்னன் அளிப்பான்...!!

அன்று இரவாமல் ஏழை அவன்
வறுமை நீங்கும் தினம் புது
பொலிவு கொண்டே வீரனவன்
உள்ளுணர்வும் ஓங்கும்...!!

ஜல்லிக்கட்டு அதில் ஏழை வீரன்
இருவருக்கும் சாதகமாய் இருந்ததேயன்று
வீரன் அங்கு சாக்கவுமில்லை காளை
அன்று வதைக்கப்படவுமில்லை..!!

அன்று ஜல்லிகட்டு வீரம் தூண்டும்
விளையாட்டாய் இருந்ததேயன்றி
பிற உயிரின் மேல் வீரம் காட்டும்
விளையாட்டாய் இருந்ததில்லை...!!

தமிழர் வீரம் தரணி காக்குமென்றே
தமிழனவன் சிலம்பு கொண்டு
சிறப்படைந்தான் வாழ் வீச்சில்
அன்று தேர்ச்சி அடைந்தான்....!!

புறமுதுகில் தாக்காத தமிழனவன்
வீரம் அதை தனக்கிணையான
வீரனோடு காட்டுவதையே தமிழர்
மரபு என்ற பண்பாட்டை கொண்டிருந்தான்..!!

வீரம் தூண்டும் விளையாட்டு வீரம்
காட்டும் விளையாட்டாய் மாறியின்று
போனதாலோ களமதில் மக்கள் குருதி
சிந்தி காளையும் அங்கு வதைக்கபடுகிறது...!!

மானிடனே மண்ணில் உந்தன் வீரம்
காட்ட மல்யுத்தம்,கபடி,பளு என்று
உன் வீரம் சார்ந்த விளையாட்டு
பல இருப்பதை நீயும் அறிவாயா..!!

வீரம் காட்டும் விளையாட்டாய்
ஜல்லிக்கட்டு வேண்டும்மென்று சட்டம்
பேசும் மக்களெல்லாம் களமிறங்கி
சீறும் காளைதனை அடக்க முடியுமா...!!

வேடிக்கை பார்ப்பதற்கு ஓர் உயிரை
இனாமாய் களமிறக்கி ஊசலாட
விடுவது தான் மனிதர்களின் பகுத்தறிவா
அன்றி பிறர்வலியை ரசிப்பதுதான் நல்ல
தமிழரது பண்பாடா..!!

ஏர்ஓட்ட தலைகுனிந்து வந்தபடியும்
கொடுக்கும் பாரமதை தூரமதில்
கொண்டு சேர்த்தும் காளை தனை
வளர்த்தகடன் தீர்த்தபோதும் இன்னும்
வதைப்பது தான் தமிழர் அழகா.!!

ஜல்லிக்கட்டு வேண்டுமென்று வீறுகொண்டு
பேசிக்கொள்ளும் மானிடா மட்டைபந்து
என்று பலர் பகிர்ந்தே வெற்றி பெறும்
விளையாட்டுக்கீடாய் கோடி
ரூபாய் கிடைக்குமேயடா..!!

ஜல்லிக்கட்டில் தனித்து நீயும் வீரம்
காட்டி உயிர் மாய்த்தாலும் உந்தன்
குடும்பத்திற்கு ஒருகோடி இழப்புநிதி
அரசு கொடுக்குமா அன்றி கூடி நிற்கும்
மக்கள்கூட்டம் லட்சம் பாதி கொடுப்பனரா..!!

உயிர் மதிப்பறியா சிறுமை கூட்டம்
ஜல்லிக்கட்டில் கோடி ரூபாய் கொடுத்தாலும்
இழந்த உயிரை தேடி சென்று
மீட்க முடியுமா உந்தன் இன்பம் தொலைத்த
இன்னல் யாவும் மறக்க முடியுமா...!!

இதற்க்கு மேலும் புகழின் உச்சிவரை
தமிழர் வீரம் காட்ட வேண்டும் தமிழ்
மண்ணின் பண்பாட்டை காக்கவேண்டும்
என்ற வண்ணம் குருதி உந்தன்
உள்உணர்வில் கொதிக்கிறதா...!!

தயங்காதே மானிடா உரிமையோடே ஓடி வா
நம் நாட்டின் எல்லையிலே துப்பாக்கி
ஆயுதத்தை உன் கைகளுக்குள் அடக்கிதினம்
எதிரிகளை உந்தன் வீரமதில் வீழ்த்திவிட
அச்சமின்றி அணிவகுத்தே ஓடி நீயும் வாடா...!!

மானிடனே உன் மனவீட்டில்
அறிவால் நிறைந்த வீர
வெளிச்சம் அறியாமை போக்கிட
என்று ஒளிமிகுந்து ஜொலிக்குமடா
அன்றே தமிழர் வீரம்
மணிமகுடம் தரிக்குமடா...!!

....கவிபாரதி....

எழுதியவர் : கவிபாரதி (11-May-14, 3:58 pm)
பார்வை : 301

மேலே