எனைவிட்டு போய்வி டாதே
அறுசீர் விருத்தம் :
யாருன்னை எறிந்தார் வானில்
--யாமத்து வெண்ணி லாவே
பாருக்குள் இங்கே உன்னைப்
--பாடாத ஆளே இல்லை
தேருக்குள் உன்னை வைத்து
--தேவதைபோல் கூட்டிச் செல்வேன்
தூரும்செவ் வானின் சாரல்
--அதில்நனைந்தும் கரையாள் நீயே
கோருகின்றேன் விடியல் வந்தால்
--எனைவிட்டுப் போய்வி டாதே !