மூக்கும் முகமும் சிவந்தது - இணைக்குறள் ஆசிரியப்பா

மருத்துவ மனைக்கு காரில் சென்றும்
நேற்று மாலையில்
காற்றும் மழையும்
சுழன்றடிக்க, சிறுமழைத் தூரலில்
முழுவதும் நனைந்தோம் குடையின்றி!
குற்றால அருவியாய் மூக்கில் ஊற்றுதே! 1

குற்றால அருவியாய் மூக்கில் ஊற்ற
துடைத்துத் துடைத்து
கைக்குட்டை நனைந்து
கையும் சோர்ந்தது! மிகவே
மூக்கும் முகமும் சிவந்தது!
இயற்கை அன்னை அளிக்கும் தண்டனையே! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-May-14, 8:43 pm)
பார்வை : 145

மேலே