நீ சிரித்தால் நான் சிரிப்பேன்

நீ சிரித்தால் நான் சிரிப்பேன்

இறுதித் தேர்வு முடிவைப் பார்த்த மகேசுக்கு தூக்கிவாரிப் போட்டது.எல்லா மாணவர்களும் தங்களது முடிவைப் பார்த்து விட்டு சிலர் சிரித்தவர்களாகவும் சிலர் தலையைத் தொங்கவிட்வர்களாகவும் சிலர் எந்தவித உணர்ச்சிகளையும் காட்டாதவர்களாகவும் சென்று கொண்டிருக்க மகேஸ் மட்டும் ஆழ்ந்த சிந்தனையிலும் கவலையிலும் காணப்பட்டான்.

அவனது நண்பர்கள் பலர் வந்து அழைத்தும் அதனை கவனத்தில் கொள்ளாது சிந்தனையுலேயே இருந்தான்.அவனது நண்பன் கமலன் வந்து அழைத்தும் அவன் எழாமலேயே நீ போ கொஞ்சம் தாமதித்து வருகிறேன் என்று மறுத்துவிட்டான்.

இது எப்படி நடந்தது இது சாத்தியமா?என்ற கேள்விகள் அவனது மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தது!
இவனி்ன் இந்நிலையைக் கண்டவர்கள் பாவம் பரீட்சையில் கோட்டை விட்டுட்டான் என்று சிலரும் படிக்கும் நேரத்திலே படிக்காம ஊர் சுத்துறது.இப்ப கவலைப் பர்றது.என்று சிலரும் தங்களுக்குள் நினைத்துக் கொண்டு செல்ல,மகேசுக்கு இது எப்படி நடந்தது என்பதுதான் புரியாத புதிராக இருந்தது.
தன்னிலையை சுதாரித்து கொண்டவனாக வீட்டை நோக்கி நடை பயின்றான்்
இவன் வீடு ​போய் சேர்வதற்கு முன்னமேயே இவன் முடிவு பற்றி ஊரவர்கள் மூலமாக அறிந்த மகேசின் அப்பா, இவன் வரவுக்காக கோபத்துடன் காத்திருந்தார்.
மகேசின் முகத்தைப் பார்த்தவுடனேயே மகேசின் முடிவை உறுதிப்படுத்தியவராக ஆத்திரம மேலிட, வகுப்பில் முதலாம் பிள்ளையாகவரும் உனக்கு என்ன நடந்தது.இனி நீயெல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்றெல்லாம் வாய்குகு வந்தமட்டும் பேசத் தொடங்கினார்.

ஆனால் மகேசுக்கு மட்டும் அப்பாவின் இந்த கோப வார்த்தை ஏறவேயில்லை.அவனுக்கு இது எப்படி நடந்தது என்ற வினாவே மேலோங்கி இருந்தது.

இந்த வேளை மகேசின் அப்பாவின் நண்பர்.மகேசின் அப்பாவின் கையைக் குழுக்கி வாழ்த்துக்கள் உங்கட மகன்ற வெற்றிக்கு உங்கள் முயற்சியும் மகேசின் கெட்டித்தனமும்தான் காரணம் என்று வாழ்த்தினார்.மகேசின் அப்பாவுக்கு ஒன்றுமே புரியாமல் மகேசைப் பார்த்தார்.

என்ன சொல்றீங்கங்க என்றதற்கு மாவட்டத்திலேயே உங்கமகன்தான் முதனிலையில் இருக்கிறார்.இது தெரியாதா உங்களுக்கு.உங்க மகன் சொல்லவில்லையா?என்று ஆச்சரியத்துடன் கேட்டுவிட்டு மகேசின் தோலில் தட்டிவிட்டு விடைபெற்றுச் சென்றார்.

தனது நண்பன் குமார் தன்னைவிடக் கெட்டிக்காரனாக இருந்தும் ஏன் அவனால் சித்தியடையமுடியாமல் போனது,இனி அவன் என்னை விட்டுபிரிந்துவிடுவானே என்ற கவலைதான் அவனை தொடர்ந்து வாட்டியது.

எழுதியவர் : ஜவ்ஹர் (14-May-14, 8:49 am)
பார்வை : 519

மேலே