யாரடி நீ மோகினி

அழகிய காலை நேரம்
பூக்கள் விழுந்த சாலையோரம்
அவள்
நடந்து போகையில்
சிலர் பாதம் பட்டு
நசிந்த பூக்கள்
இவள் பாதம் பட்டதும்
புதிதாய் பூத்ததே

இது என்ன மாயமோ
என் உதடுகள் கேட்டது..?

இது என்ன சொர்கமா
விழிகள் பார்த்து வியந்தது ..!

இவள் யார்

இந்நூற்றாண்டில் பிறந்த
சீதையோ

கண்ணதாசன் எழுத மறந்த
காவியமோ
பிக்காஸோ கைப்படாத
ஓவியமோ

பிரம்மன் எழுதிய
சங்கக் கவியோ

இவள் யாரோ ...? யார் இவளோ ..?

----------------------------------------------------------------------------
ஒரு நாள் காலையில்
நான் சாலையோரம் நடந்து போய்க்கொண்டிருந்தேன்
அந்த சாலையோரம் முழுவதும் கீழே நிறைய பூக்கள்
விழுந்து கிடந்தன ....
அவ்வழியே ஒரு அழகான பெண் தேவதை என்னை கடந்து போனால் ...அவளை பார்த்த அந்தருனத்தில் என் மனதில் தோன்றிய சில வரிகள் தான் இவை ....

அந்த girl செம அழகா இருந்தா .....

எழுதியவர் : ஏனோக் நெகும் (16-May-14, 5:45 pm)
பார்வை : 178

மேலே