மத நல்லிணக்கம்

வேளாங்கண்ணி மாதா தோளில்
விநாயகர் சாய்ந்திருக்கிறார்.
வாசலில் பொம்மைக் காரன் !

**********

நாகூர் தர்க்கா வாசலில்
அண்ணாமலையார் தீபம்.
"ஒன்னாம்ப்பு" பாடப் புத்தகம்.

*********

எந்த சாமின்னாலும்
பத்து ரூவாதான்.
தெருவோர கீ செயின் கடையில்

எழுதியவர் : நேத்ரா (17-May-14, 6:30 am)
பார்வை : 5853

மேலே