சே என்றால் மா இன்று மே 18உன் நினைவுகளோடும்
சே என்றால் மா...!!!
தன்னை மறந்து
உலகை நினைத்தோரை
உலகம் நினைத்திருக்கும்
உலகை மறந்து
தன்னை நினைத்தோரை
உலகம் மறந்துவிடும்!
இன்னமும் சே,
உன்னை நாங்கள் நினைத்திருக்கிறோம்!!
கனவின் சுவடுகள் ,
காற்றின் நிழல்கள்
கடும்பசியின் உருவங்கள்
கண்ணில் பதிவதில்லை!
ஆனால் உன் கண்களில்
பதிந்திருந்தன - !!!
வாழ்வுரிமைக்கு ஏங்கின
மானுட பாவங்கள்!
பாவம் நீக்கிட
எத்தனை பாவம் கண்டாய் நீ!
பாதையில் பார்வையையும்
பார்வையில் பாதையும்
சரியாக கண்டவன் நீ!
சோம்பல் சாம்பலில்
நீ மூழ்கியதேயில்லை
அயர்ந்த கண்களிலும்
வீரமே கங்குகளாய்.....
ஊதிப்பார்த்தால் சீறிப்பாயும்
வீரம்-
உண்மையானது இப்போது
நீ இல்லையாதலால்...!!!!!!
எத்தனை வடுக்கள் பெற்றாய் நீ
வடுக்களின் கர்ப்பவீடு காயங்கள்
அநியாயத்தின் பதிலிடு காயங்கள்
நியாயங்களின் பரிசு வடுக்கள்
காயங்கள் மறையும்
வடுக்கள் வாழும்!
வடுக்களை உடுப்பாய்
அணிந்தவன் நீ
எனவேதான்
உண்டிக்கும் உடுக்கைக்கும்
அண்டி வாழ்வதும்,
மண்டியிடுவதும்
மரணத்தை
கொச்சைப்படுத்துவது
போன்றது என்றாய். !!!
"அநியாயம் கண்டு
சினமுற்றால்
நீ என் தோழன் "
என்றவன் நீ.
வெற்றிப்பயிர் நாற்றங்காலாய்
எத்தனை மண்ணில்
நீ இருந்தாய்!
விதைத்து விளைச்சளாக்குவது
மட்டுமே கடமை என இருந்து
அறுவடையை
மண்ணிற்கே அளித்தவன் நீ ...!!!
பதர்கூட அனுபவித்தாய் என
எந்தப்பதரும் கூற முடியாத
புனித புரட்சியாளன் நீ!
சராசரி மனிதர்களுக்கு -
காட்சிக்கும் சாட்சிக்குமே கண்கள்
காமத்திற்கும் யாசகத்திற்க்குமே கரங்கள்
அன்றியும்
உன் கண்களோ புரட்சி பாதைக்கே
உன் கரங்களோ வீரத்துக்கும் வெற்றிக்குமே....!!!
தன்னை மறந்து
உலகை நினைத்தோரை
உலகம் நினைத்திருக்கும்
அவர்களுக்கு மறுபெயர்
"மா மனிதன் "
இனி சே என்றால் மா எனப்படுவதாக...!!!
மே 18ன் இழப்பு பெற்ற எவரும் இனி மா என்பதாக...