புகுந்த வீடு
மணமேடையில்
மனம் திறந்து
மணவாளன்
மனதுடன் கலந்து
திருமணத்தில்
இனைந்து
புகுந்த வீட்டில்
புகும் நேரம் ......
பரவசம்
பயம்
பாசம்
பாதுகாப்பற்ற
உணர்வுகள் ..
சுதந்திரம்
எண்ணங்களின்
சிறை வாசம்
விருப்பு
வெறுப்பு
சுமைகள்
சவாலான
வலிகள் ........
மங்கள வாழ்க்கையில்
மங்கையின் மனதில்
கனவுகளின் இடையே
மாறும் உணர்வுகளின்
அணி வகுப்பு
மனித
சங்கிலியாய்
இறுக்கத்தை ஏற்படுத்த
கணவனின்
உடல் நெருக்கத்தை
உள்ளத்தின் நெருக்கமாய்
மாற்றும் வரை
ஏற்படும்
இடர்பாடுகள் ......
பிறந்த வீட்டின்
அங்கீகாரத்தை
புகுந்த வீட்டில்
பெற முயற்சிக்கும் போது
ஏற்படும் இடர்பாடுகள் ..
குடும்ப சுமைகளை
சுவையாய் ஏற்று
குடும்ப பெண்ணாய்
குலத்தை காக்கும் தருணத்தில்
ஏற்படும் இடர்பாடுகள் ...
வேரோடு பிடுங்கிய செடி
மற்றுமொரு இடத்தில்
செழிப்பாய்
விழுதிடும் போது
ஏற்படும் இடர்பாடுகள்
மனித உறவுகளின்
சங்கிலி
இருகாமால்
தளர்த்த நினைக்கும் போது
ஏற்படும் இடர்பாடுகள் ....
பெண்கள்
வாழ்க்கையின்
மைய பருவமான
இப்பருவத்தில்
அனுபவ பாடங்களை
படித்து
யதார்த்தத்தை ஏற்று
மனம் எனும்
பாத்திரத்தை
வெற்றிடமாக்கி
உடலையும்
உள்ளத்தையும்
அர்பணித்து
புகுந்த வீட்டை
பிறந்த வீடாய்
பொலிவோடு
மாற்றி
புகுந்த வீட்டில்
காலெடுத்து வைத்து
அகல் விளக்காய்
மகர ஜோதியாய்
அணையா விளக்காய்
அனைவருக்கும்
வெளிச்சம் காட்டும்
பெண்களின்
பொறுமைக்கு ====
தியாகங்களுக்கு ===
பணிவிற்கு ====
சாதுர்யத்திற்கு =====
உள்ளத்தின் மாற்றத்திற்கு ===
சாதனைகளுக்கு ======
ஒரு சபாஷ் போடுவோம் =====

