காலேஜ் தியரி - ப்ரியன்
அர்த்தம் ஒன்றாய்
கண்டுகொண்டேன்
உன்
பார்வைக்கும்
புன்னகைக்கும்
என்னை
சினேகிப்பதாய்
அலங்கோலமாயிருந்தேன்
கொஞ்சம் அழகானேன்
உன்
நினைவுகளை சுமந்ததால்
பிடிக்காதவைகளையும்
அதிகம் நேசித்தேன்
உனக்கு
பிடித்திருந்ததால்
அருகில் இருந்தும்
வருத்தப்பட்டேன்
வரப்போகும்
பிரிவுகளை எண்ணி
ஒரு முறைதான்
கிசுகிசுத்துச்சென்றாய் என்னோடு
இப்போதும்
கதைத்துக்கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளோடு