மே-18 தமிழன் இன அடயாளத்தைத் தொலைத்த நாள் சிறப்பு பார்வை

முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட உரிமைக்காக போரடிய தமிழ் மக்களுக்கும் அங்கு வீரகாவியமான வீர மறவர்களுக்குமான ஆத்மசாந்திப் பிராத்தனைக்கான நினைவேந்தல் நினைவுகள் தாயகத்திலும் உலகெங்கிலும் மே- 18இல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

மே-18 தமிழீழ தேசியத்துக்காக போராடிய தலைமைத்துவமும், தளபதிகளும், போராளிகளும், வீரகாவியமான, மாவீரரான, தமிழ் மக்களுக்காகத் தம் இன்னுயிரை ஈகம் செய்த நாள் என்பதற்கப்பால் எமது ஈழத்தமிழ் மக்கள் இன அடையாளத்தையே தொலைத்த, தமிழ் மக்களை யுத்த வெறியுடன் கொன்று குவித்த அந்த கோர நாட்களின் இறுதி நாளாகவும் காணப்படுகின்றமை தமிழினத்தின் சாபக்கேடாக மாறியுள்ளது என்றால் மிகையாகாது.

மே 18 என்பது – தமிழீழ தேசியத் தலைவரினால் பாதுகாக்கப்பட்டுவந்த தமிழீழமும் தமிழ் மக்களின் இன அடயாளங்களும் தொலைக்கப்பட்ட நாள், ஈழத்தமிழனின் பாரம்பரிய கலாசார விழுமியக் கட்டமைப்புக்கள் சிதைக்கப்பட்ட நாள், சிங்களத்தினால் ஈழத்தமிழன் சிறைப்பிடிக்கப்பட்ட நாள், எல்லாவற்றிற்கும் மேலாக எம்மருமைத் தானைத் தலைவன் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நாம் இழந்து தவிக்கும் நாள்.

இந்த நாள் எம்தமிழ் மக்களின் குருதியால் வரலாற்றுப் பக்கங்களில் எழுதப்பட்டுள்ள மறக்கமுடியாத, உலகமே கண்ணீர் சிந்திய நாளாகும். இந்தவகையில், தமிழன் சிந்திய குருதி தமிழீழதில் இரத்த ஆறாக பெருக்கடுத்த அந்த நாளை சிங்களம் வெற்றி நாளாக்கியுள்ளது. ஆனால் தமிழினம் எழுச்சி நாளாக, முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட எமது உறகாளுக்கான நினைவேந்தல் நாளாக அனுஷ்டித்துக் கொண்டிருக்கின்றது.

முள்ளிவாய்க்கால் படுகொலை உலகெங்கிலும் பரந்துவாழுகின்ற தமிழ் மக்களுக்கு பேரதிர்ச்சியையும் ஆறாத்துரத்தினையும் நீங்காத வடுக்களையும் கொடுத்துள்ளதால் இதனை உலகமே ஒன்றுதிரண்டு அனுஷ்டித்துவருகின்றது.

இந்த எழுச்சிநாளில் உணர்வுள்ள தமிழ்மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு உறவுகளை இழந்த எமது மக்களின் துயரங்களில் பங்கெடுப்பதுடன் எமதருமைத் தேசியத் தலைவரை , அவரது வீர மறவர்களை நெஞ்சில் சுமந்து வருகின்றது.

அந்தவகையில் நம் எழுத்து .கம சார்பில் நாமும் ஒப்பற்ற விடுதலை போரில் ஆகுதியான மறவர்களுக்கும், மக்களுக்கும் வீரவணக்கங்களைச் செலுத்துவோம்

‘தமிழனின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்ற என்ன விதையை ஒவ்வொரு தமிழனும் தங்களின் உணர்வுகளில் விதைத்து ஒற்றுமையுடன் அந்த உயர்ந்த சுதந்திர இலட்ச்சியத்துக்காக ஒவ்வொரு மணி துளியும் உழைப்போம்.

‘தமிழனின் தாகம் தமிழீழத் தாயகம்’

நீ பிறந்த மண்ணில் நானும் தமிழனாக பிறந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் ...

எழுதியவர் : ttn செய்திகள் சங்கம் (19-May-14, 5:11 pm)
பார்வை : 1734

மேலே