ஏதுமற்ற ஏமாற்றம்
மகிழ்ச்சி தெறிக்க விளையாடித் திரள்கிறது
சேரிப் பொறித்த குஞ்சுகள்
பாதைகள் குறுகலாய் தீர்மானிக்கப்பட்டும்
பயங்கள் ஏதுமற்று ......
செருப்பிட்டு நடக்கமுடியா
காலங்கள் மாறியும்
செருப்புகளற்ற கால்களின் பயணங்கள்
இன்னும் முடியவில்லை ......
வேண்டாமென்று வீசியெறிந்த
பழைய டயர்களைக் கொண்டு
உதயமாகிறது
இவர்களின் வாகனக்கனவுகள் விளையாட்டாய்...
கரடான பாதைகளாயினும்
பயங்களற்று ஓடுகிறது பிஞ்சுக்கால்கள்
போகும்பதை புலப்படாமல் போனாலும் வாழ்க்கையின் முடிவை
ஒரு கை பார்த்துவிடுவோமென்று .....
ஓடாதே ! நில்லேன
அதட்டும் சத்தங்களை
மதிப்பிழக்க செய்துவிட்டு
விரைகிறது வீரம்
அடங்கமறுத்த காளைகளாய் ........
சோற்றுப் பருக்கைகளைகூட
வேண்டாமென தள்ளிவிட்டு பறக்கிறது
குஞ்சுகளின் விளையாட்டு
மகிழ்ச்சிப் பருக்கைகளை
பொறுக்கித் தின்ற மிதப்பில்.......
கைகளபிடித்திருப்பது
சிறுதுறும்பான குச்சிகலாயினும்
தட்டித் தட்டி மெல்லப்பறக்கிறது
கனவுகள் விரிந்த
இவர்களின் விளையாட்டு வானம்......
கருவை முற்க்களின் நெரிசலிலிருந்து
வெளியேறத் துடிக்கிறது விதியின் விளையாட்டு
மடை உடைத்து
தடைகளற்றுப் பாயும் நீராய் ........
கூரைச்சரிந்த கூடுகளே
எந்தக் குஞ்சிகளின்
அண்டி புழங்கும் அரண்மனைககள் -ஆயினும்
இதைத்தான் ஒவ்வொருமுறையும்
எரித்து சாம்பலாக்குகிறது
ஆதிக்க பொறிகள்........
உங்கள் பிள்ளைகளைப்போல்
சுதந்திரமாய் விளையாட
மட்டைப்பந்து மைதானமோ
சறுக்கு விளையாட்டு எந்திரங்களோ
கம்பியூட்டெர் கேமோ
ஏதுமற்ற ஏமாற்றத்தோடு
வெம்பிப் பழுக்கிறது கனவுகள்
சேரிக்குஞ்சிகளின் ஒவ்வொருபொழுதிலும்.!.....