எனக்கான மரம்

இந்த மரம் வளர்ந்து
பூத்து காய்த்து கனிந்து...
திரும்பவும் விதை
தேடித் தான் அலைகிறது
மீண்டும் வளர ...!
இந்த விதை
வேர் விட்டிருப்பது
தண்ணீரைத் தேடி அல்ல
வாழ்க்கை கண்ணீரிலே ...!
எம் கவிப் பூக்கள்
பாடுகிறது வாசனை
முகரும் வண்டினங்களை
நாசித் துளைக்கும்
வாசனையற்ற மலர்களை அல்ல...!
என் படைப்பு சுவாசித்து
மகிழ்ந்தது தாவணி போடும்
காலத்திலிருந்தே....!
என் எழுத்தின் ரசனை
அனைவரது மனங்களிலும்
மாசு படிந்த மனதை
ஒட்டடை அடிப்பதே...!
எழுத்து எனக்கு உயிர் மூச்சு
என் நாவின் நரம்புகளைத்
தட்டி எழுப்பி நாசி நுகர்ந்து
எழுதும் என் கற்பனைக்
குதிரைகளை தட்டி விட்டது
பருவ வயதில் தான் ...!
என் விழிகள்
பட படக்கும் பொழுதெல்லாம்
என் எழுதுகோலுக்கு
தூக்கம் மறந்திடும் ....!
எனக்கான அரும்பொழுதுகள்
என் எழுதுகோல்தோழனின்
மை ஆயுள் தீரும் வரை
ஆதவனையும் திரும்ப வைக்கும்
வாழ்க்கை பூந்தோட்டம்
எமது கவிதைப் பூக்கள் ...!