இது கனவுகளின் விடியல்

புத்தம் புது
விடியல்கள்
எனக்கெனப் பிறக்கின்றன!
வெளிச்சத்தைத் தக்க
வைக்க வழியின்றி
இருட்டைப் பரிசளித்து
விடைதருகிறேன் !
காரிருள் கண்டு
பயந்தோடும் அந்தக்
கதிரவனை வைக்க
வேண்டும் வீட்டுச்சிறையில்!
தான் மாசுற்று
இருளகற்றும் நிலவு ..
மன இருளகற்றுபவள் பெண்
தன் தூய்மையால்!
கறை கொண்ட
நிலவென பெண்மையை
களங்கப்படுத்தல்
நியாயமல்ல !!
ஒளியைத் தேடுகிறேன்
ஒளியிலே ஒளிந்திருந்து ..
புலர்ந்திடும் பொழுதுகளைக்
கட்டி வைக்கிறேன் ,என்
நாளைய இரவுகளின்
விடியல்களுக்கு !!