உன்னால் என்ன செய்திட முடியும் - ✿ சந்தோஷ் ✿

எவன் வந்தால் என்ன? -இந்திய
விருந்துண்டால் நமக்கென்ன?
புதிய அரசாங்கம்.
பழைய பஞ்சாங்கம்.

தமிழினத்தை கொன்ற
குருதி நாற்றத்தில்
சிங்கள காட்டேரி
பதவி விழாவிற்கு
டெல்லிக்கு வருகிறான்...!

அவன்
அண்டை நாடு
அழைக்கிறார்கள்..!

அவர்களுக்கு என்ன
அழைக்கட்டுமே...?
துடித்துடித்து செத்ததும்
வெடிவெடித்து மாண்டதும்
தமிழக உறவுகள் தானே..
இந்திய சொந்தங்கள் அல்லவே.. ?

அந்த காட்டேரி பன்றி
வரட்டுமே..! தமிழா..!
உனக்கென்ன ஆவேசம்..?
இருநூறு ரூபாய்க்கு
வாக்கு முந்தானை
விரித்தவன் தானே நீ...!
உனக்கென்ன கொதிப்பு..?
ஓ ! இன்னும் உப்பு
போட்டுத்தான் சாப்பிடுகிறேன்
என்று அறிவிக்கிறாயோ??

உணர்ச்சிப்பொங்க
நரம்பு வெடிக்க
எழுதுகோல் கொதிக்க
சில பல
கண்டன கவிதைகளை
எழுதுவதை தவிர
உன்னால்
என்னால்
என்ன்
செய்திட முடியும்?
தமிழா!
என்ன எழுதி
என்ன கிழித்திட முடியும்?

-----------------------------------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (23-May-14, 12:01 am)
பார்வை : 659

மேலே