கையில் எடுப்பது காதலை மட்டும் - இராஜ்குமார்

உள்ளம் மட்டும்
உறவென சொல்லும்
இரண்டு இதயம்
இறுதியில் இங்கே ..!!

நிச்சயம் செய்த
நிமிடம் முதல்
ரசிக்க தொடங்கிய
இருவரின்

ரசனை இங்கே
ரயில் பாதை போல் ..

நினைவுகள்
நிற்க இடமின்றி
நீண்டு சென்று
நீரில் மூழ்கி
நீச்சலில் வாழ்ந்தது ..!!

வண்ண மாலை
வரவிற்காக - அவள்
சிரிக்கும் தருணத்தில்
சிதறியது சாரல் ..!

அச்சாரலும் சங்கீதமாய்
கரம் பிடிக்கும்
கணவன் காதில் ..!!

ஆசிகளுடன் ஆரம்பம்
இருவரின் இல்லறம் ..!!

கனவிலும்
கவலை பரவி
இன்பம் பறிக்கும்
இடம் இதுவென சொல்லும்

பலரின் பார்வை பட
பயணம் செய்தது
இப்பாதங்கள்..!!

சொந்த ஊருக்கு
பயணம் செய்ய
பணமில்லை என
விழிகள் சொல்ல ..!!

கடந்து செல்ல
கால்கள் இருக்கு என
இதயம் சொல்லி ..!!
உறவை தேடும்
உள்ளம் இவை ..!!

கணவன் பறித்த
மழையில் நனைந்த
மல்லிப் பூ
மாலை சூடிய
மங்கை அவளின்
கண்ணீர் துடைத்து
குடி கொண்டது
கூந்தலில் .- என்றும் .!!

கவலை இருந்தும்
அன்பை அள்ளி தரும்
அன்பன் அவனை
இதயம் மகிழ
இதழோர
புன்னகையில்
புதைத்து வைத்தாள் - இன்றும் ..!!

இத்தனை நடக்க
இவர்கள்
கையில் எடுப்பது
காதலை மட்டும் ..!!

அன்பை ரசித்தால்
அனைத்தும் அழகே !!


--- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (23-May-14, 2:41 am)
பார்வை : 260

மேலே