பெண்ணின் சாபகேடு

பெண்ணே
கொக்கை போல் காத்து கொண்டிருக்கும் ஆணின் மத்தியில்
மீனை போல் துடிப்பது ஏனோ
பாரதி கண்ட புதுமை பெண்ணாய் இருந்த நீ
இன்று பாரினில் பாழாய் போனது ஏனோ
பல்லை காட்டி சிரிக்கும் ஆணின் மத்தியில்
பவள முல்லை போல் வாசம் வீசிய நீ இன்று
பஸ்வமாய் போனது ஏனோ
அன்று கள்ளி பாலை கொண்டு உன்னை கொன்ற உள்ளங்கள் இன்று உன் வளர்ச்சியை கண்டு
பெருமிதம் கொண்டாலும்
உன்னை இந்த சமுதாயம் பலவினமாய் கருதுவது ஏனோ
உன்னை போற்ற வேண்டிய இந்த உலகம்
உன்னை தூற்றி வாழ்வது ஏனோ
ஏனென்றால் நீ ஒரு பெண்

எழுதியவர் : (23-May-14, 9:44 am)
சேர்த்தது : Ranjani
பார்வை : 107

மேலே