வாழ்க்கை
மண வாழ்க்கை
மணம் வீசாமல், சிலருக்கு
மனதில் அலை வீசுவதும் ஏனோ...?
கல்யாண வாழ்வில்
கல் போல் மனம் கொண்டு
வாழ்வதும் இங்கு சரிதானோ...?
புரிதலின்றியும் புரிதலுக்கான
புரிதலை புதைத்து வைப்பதும்
புண்ணாகி வதைப்பதும் முறைதானோ...?
எனக்கென நீயும்
உனக்கென நானும்
வாழ்வதை விடுத்து
எனக்கென நான் இருப்பேன்
உனக்கென நீ இரு என உரைப்பதும் முறைதானோ....?
மௌனமாய் நின்று
மெல்ல மெல்ல உயிரை
உருக்குவதும் சரிதானா... ?
இவ்வாழ்க்கையே
இல்வாழ்க்கையே
இவ்வளவுதானா....?
-PRIYA