மீண்டும் நீ வருவாயா
வெளிச்சம் ஏதும் இல்லை
யாருக்கும் தெரியாமல்
என்னுள் நீ வந்தாய்
என் ஆசை எல்லாம் நிறைவேற்றினாய்
என்னை நான் மறந்த நிலையிலும்
நான் நினைத்ததை
வெற்றிக்கு மேல் வெற்றி பெற செய்தாய்
நான் செய்ய முடியாது
என நினைத்ததை செய்து காட்டினாய்
என் கற்பனைகளும்
உனை கண்டு
பொறமை படும் அளவிற்கு
நீ அமைதியாய்
என் இரவுகளை அழகாய்
அலங்கரித்தாய்
கனவே............. நீ மீண்டும் வருவாயா
வார்த்தையால் சொல்ல முடியாததை
எழுத்தால் எழுத முடியாததை
மனத்தால் நான் நினைத்ததை
நீ வந்து நிறைவேற்றினாய்
கனவே............. நீ மீண்டும் வருவாயா
கனவில் வெற்றிபெற வேண்டுமெனில்
என்றும் அதையே நினைத்திடு
====================================
நிஜத்தில் வெற்றி பெற வேண்டுமெனில்
என்றும் அதையே முயற்சிடு