மனதின் ஒசைகள்

ஆயிரம் கால்களுடன் மரஅட்டையொன்று,

மனதினுள் ஊர்ந்து கொண்டிருக்கிறது சில காலங்களாக....!!!

பரந்த வெளிப்பரப்பின் சன நெரிசலின் எதோவொரு மூலையில்

முகமறியாத முகமொன்றின் புன்னகைக்காக தவமிருக்கிறது.....!!!

தாழ்வாரத்தை நோக்கி பாய்ந்து முடிந்த,

மழை வெள்ளத்தின் ஈரலிப்பை நோக்கி கால்கள் நகர்கின்றன.....!!!

பாதையில்லாப் பயணமொன்றின் நடுவில்,

வழிதவறிய பாதையின் பாதச்சுவடுகளை தேடி

கண்கள் பணித்து கலங்குகின்றன....!!!

பாலைவனப் பாறையொன்றின் அடியில்,

இதிகாசங்களாய் கிடந்தது போல் இதயம் கணக்கிறது....!!!

தேடிக் கிடைத்த பொருளை தொலைத்து விட்ட

இயலாமையின் வலியை இன்றியமையாததாக்கி கொள்கிறது காலம்....!!

மகரந்த தேனை உண்டு புசித்த வண்டை,

பூக்கள் இல்லாத தேசத்தில் பறக்க விட்ட வெறுமை...!!!

எதிர்காலத்தின் இறந்த காலத்தை எண்ணி,

திருத்துவதற்குள் இறந்த காலமாகி விட்டது நிகழ்காலம்...!!!

புறத்தை தைத்த அம்பை பிடுங்கி,

வழியும் குருதியை மசியாக்கி கையொப்பமிட்டு,

எய்தவனுக்கே பரிசளிக்கும் கருணையை யாசிக்கிறேன்..,

பாதையில் வருவோர் போவோரிடத்தில்.....!!!

தாயின் அனைப்பு...,

பூவின் மலர்ச்சி..,

மழலையின் சிரிப்பு...,

பெண்மையின் பரிசம் யென

இந்த கணப் பொழுதில் கிடைக்கும் மிகச்சிறிய

இன்பத்திற்காக ஏக்கம் கொள்கிறது உள்ளம்.....!

வானவில் இரவில் நிலவின் நிழலில்

வசந்தத்தின் வாசலில் நினைவின் மொழி மீளும் நாளொன்றில்

குரலறுந்த குயிலொன்று பாடும் ராகமதில்

என் மன்தின் ஒசைகளை கேட்கலாம்........!


#30-04-14

எழுதியவர் : ராஜன் விஷ்வா (25-May-14, 4:15 pm)
பார்வை : 120

மேலே