மனைவி எனும் பெரும் பதவி

பதவிகள் பல்லாயிரம் இருந்தும்
மனைவி எனும் பதவிக்குள்
புதைந்து கொள்ளும்
அனைத்து பதவியும்

உறவுகள் பல இருந்தும்
அனைத்து உறவுகளும்
ஓரிடத்தில் அடங்குமே
மனைவியிடத்தில்

தாயாக மாறி
தாலாட்டுகிறாள்
சகோதரியாகி
சண்டை போடுகிறாள்
தோழியாகி
தோள் சாய்கிறாள்
அறிவுரைகள் வழங்கிடும்
ஆசனாகிறாள்


பதவி கிடைத்தாலும்
அடிமையாகிறோம்
சில சமயங்களில்
அடிமையாக்குகிறோம்.
அடிமை ஆனாலும்
அடிமையாக்கினாலும்
நல்லதொரு மனைவி
குலம் காக்கிறாள்....

இப்பதவி
கிடைக்காமலும்
சிலர்

கிடைத்தும்
விட நினைப்போர்
சிலர்

விட நினைத்தாலும்
விட முடியாமல்
தொடருவோர் பலர்...................

பெரும் பதவியிதனை
சுகமாய் நினைத்து
சுமந்தால் மட்டுமே
சுற்றங்கள் சூழும் .அன்றி
சூறாவளிகளே சுழலும்.


-PRIYA

எழுதியவர் : PRIYA (25-May-14, 6:11 pm)
பார்வை : 137

மேலே