துப்பாக்கியே
பாதுக்காக்க பிறந்த நீ
பழிதீர்க்க மாறிவிட்டாய்
காவலனாய் இருந்த நீ
இன்று கள்வனாக மாறிவிட்டாய் ......
உலக சரித்திரத்தில்
உயிர் குடித்து வாழ்ந்தவன் நீ
உன் தோட்டாக்களின் துப்பல்களில்
துடித்து இறந்தவர் எத்தனை பேர் ........
அபாயக்காரர்களின் கையில் சிக்கி
அப்பாவிகளை அல்லவா கொன்றிருக்கிறாய் நீ
காலங்கள் மாறியும் கூட
உன் ஆயுள் குறைந்த பாடில்லை ......
இயந்திரமாய் இயங்கி இயங்கி
இன்று எத்தனையோ
மகாத்மாக்களை சமாதிக்கு அனுப்பியதுதான்
உன் ஒரே ஒரு சாதனை ........
கொல்லைகளே
உன் கொள்கையாய் ஆகிவிட
நீயும் ஒரு கூட்டு கலவானிதான்
நியாயப்படி நீயும் தண்டனைக்கு உகந்தவந்தான் ..
ஏழைகளின் எவ்வளவோ சொத்துக்களை
அபகரித்திருக்கிறாய் ஆணவத்தோடு
நீ நுழைந்த இடமெல்லாம்
நிம்மதி வெளியே சென்றிருக்கிறது ..........
விளையாட்டைக்கூட வினையாக்கி
விபரீதத்திற்கு வித்திட்டவன் நீ
விலங்குகளை கூட வேட்டையாடி
சாதித்த கோழைவீரன் நீ ......
பாடிப்பறக்கும் பறவைகளைக்கூட
உன் பகைக்கு மிஞ்சவில்லை
உன் முரட்டு தாக்குதலில்
மூச்சுபோனதுதான் மிச்சம் .......
உன்னால் உலகமே போர்க்களமாகி விட்டது
இயந்திரமே உன் இயக்கத்தால்
இயங்காமல் போன உடற்பாகங்கள்
எத்தனை தெரியுமா ?
அடே இயந்திர எதிரியே
என்றைக்குதான் உன் இலக்கு நிறையும்
மரணத்தின் தூதுவனே
இனியாவது மாறு ........
மரணத்தின் வாசம்
உனக்கு மலர் வாசமாய் ஆகிவிட்டது
நாளுக்குநாள் பூமியே
நரகமாக ஆக்கிவிட்டாய் .......
என் உயிருக்கும் மேலான
எத்தனையோ உத்தமர்களை
கொன்றிருக்கிறாய் நீ
உனக்கு மன்னிப்பே கிடையாது..........
பாழாய் போன மனித உலகம்
தன்மேல் இல்லாமல் உன்மேல் வைத்த
நம்பிக்கைக்கு உண்மையான விசுவாசத்தை
உலகம் முழுதும் காட்டிக்கொண்டிருக்கிறாய் ......
நீ மடிகின்ற நாளில்தான்
உலக மக்களுக்கு நிம்மதி பிறக்கும்
பாதுகாக்கும் தோரணையில்
உன் பகையாளி வேஷத்தை
இனியும் அனுமதிக்க முடியாது ........