மாயக்கண்ணாடி
காதலெனும் மாயக்கண்ணாடி
பல விந்தைகள் செய்திடுமே
உன் முன்னாடி ....
சிரித்தால் சிரித்திடும்
சில சமயம் அழுதிடும்...
அழுதால் அழுதிடும்
சில சமயம் சிரித்திடும்...
கருப்பு வெள்ளை விழிகளில்
பல வண்ண கனவு காட்டிடும்
வண்ண கனவுகளை
கலைத்து கரைந்திடும்
நினைவாலே அணைத்திடும்
உறங்க விடாமலே
உன் உள்ளத்தை குளிரவைத்திடும்
வார்த்தையாலே கொன்றுவிடும்
கண்களில் நீரை பெருக்கிடும்....
காதலெனும் மாயக்கண்ணாடி
மாயை செய்தால் மயங்கிடுமே
மனக்கண்ணாடி..
மயங்கினால் விளைவது என்னாடி
நாடி துடிப்பு துள்ளுமே
அவன் முன்னாடி....
கவனமடி
பெண்ணே
கவனமடி
கைபிடிக்கும் வரை
கழட்டி வையடி...
-PRIYA