இசையே
இசையின் பிறவி எங்கே
தெரியவில்லை
இருந்தும்
இசையை கேட்க இதயம்
மறுப்பதில்லை
இசையால் வளர்ந்த
மனிதனும்
இசையை வளர்த்த
மன்னனும்
வீழ்ந்ததுமில்லை
இசையை கேட்டு
மனம்
வருந்துவதுமில்லை ...
வலி கொண்ட நெஞ்சம்
தடும் மாறும் நேரம்
விழி தேடும் யாவும்
இசையாக தோணும்
வழி தோறும் உள்ள
வயல் காட்டில் எல்லாம்
இயல்பாக தோன்றி
இசைபாட்டு ஆகும் ...
இலைகளின் அசைவினில்
தோன்றும் இசை
இசைத்திட இசைத்திட
சுகமாகும்
வனமெங்கும் ஒளிக்கின்ற
குயில் ஓசை
மலைகளில் அலைகின்ற
இசையாகும் ...
இசையின்றி இருந்திடும்
செவிக்கூட்டம் கூட
இயல்பாக இயற்கையில்
இசைமீட்டும்
விசையின்றி பறந்திடும்
உயிர்கூட்டம் கூட
துணையாக கொண்டுள்ளது
இசைநாட்டம் ...
கவலை கொண்ட மனம்
கடுவுளை தேடி போவது போல
காதல் கொண்ட நெஞ்சம்
இசைகனியை நாடி போகிறது
இசையை வெறுக்க
என்னும் உள்ளம் கூட
இடையில் மாறும்
இமை மூடும்
நிலையில் உள்ள மனமும்
இசையை தேடும் ...