பிள்ளை நிலா
நீயோ இம்மண்ணில் விட்டு சென்றாய்
உனது சொந்தத்திற்க்காக
நானோ இங்கு கண்ணீர் வீற்று இருந்தேன்
உனது இன்பத்திற்காக
காலம் தந்த கோலத்தினால்
வந்த மாயை நானோ
இல்லை
காதல் செய்த பாவத்தினால்
வந்த சோலை தானோ ...
பால்மணம் மாறா பூவினை
பார்த்ததும் இல்லை
கண்ணினால்
பூமணம் வீசும் தென்றலை
சேர்ந்ததும் இல்லை
நெஞ்சினால் ...
பிறந்த பிள்ளை காணும் உண்மையை
இழந்த பாவி ஆனேன்
இருந்தபோதும்
இறந்த சோகம் தாக்கும் தன்மையை
உணர்ந்து நீவிப் போனேன் ...
வானவில் தந்த வண்ணங்கள்
வாழ்வினில் இல்லை
சோகம் தான்
வண்ணங்கள் உள்ள ஓவியம்
மின்னுவதில்லை
வெற்று காகிதம் ...
உன்னை
நான் இன்று வந்து சேர்வது
விதியின் செயலா
இல்லை
மான் என்று விட்டு போவது
வலியின் புயலா
வழிமாறாதோ அந்த வானவில்
வந்து சேராதோ கொஞ்ச நாளினில்
சோகம் தீராதோ எந்தன் வாழ்வினில்
பழி நீங்காதோ எந்தன் வாசலில் ...