பிறப்பு

அன்னை வயிற்றில் இருக்கும் போதே
எனக்காக எல்லோரும் ஏங்கினர்
ஆண்பிள்ளையாக இல்லாமல் போனதால்
ஏனோ அனைவரும் ஏசினர்
இன்பமாக வாழலாம் என்ன எட்டகனிக்கு
ஏங்கினேன்
ஈடாக அவர்கள் தந்ததோ ஈனபிறவி என்ற பட்டம்
உனக்காக நாங்கள் இல்லை என்று உற்றார்
சொன்னபோது
ஊமையாய் போனது என் எதிர்கால கனவுகள்
எனக்கு எதிரி யாரும் இல்லை என்று எண்ணி
எழுந்தேன் ..
ஏணியாக என் கல்வியை பிடித்தி எட்டி விட்டேன்
ஐயம் ஒருபோதும் கொள்ளமாட்டேன்
ஒழுக்கத்தை ஒருபோதும் விடமாட்டேன்
எங்களை
ஔவை -யை போல் உலகம் போற்றும்
அக்க்தே எங்களின் வெற்றியாகும் .

எழுதியவர் : ஜீவா (27-May-14, 1:59 pm)
Tanglish : pirappu
பார்வை : 472

மேலே