கஷ்டம்

காய் அரியும் வேளை
விரலும் சேர்ந்து அரிகையில்
தடித்து வரும்
கணவன் குரல்
பார்த்து செய்யக் கூடாது...

எதை.... எப்போ....?
கேட்க நினைத்தும்
வார்த்தை
விழுங்கும் மனசு.

எப்படிச் சொல்ல
ஒவ்வொரு
அரிதல் காயத்தின்
பின்னும் இருக்கிறது
கஷ்ட நினைவுகள்
வாய்த்தது தொடங்கி
வலிந்து
புணர்தல் வரை...

எழுதியவர் : க.இராமஜெயம் (27-May-14, 2:16 pm)
சேர்த்தது : Ramajayam
Tanglish : kashtam
பார்வை : 201

மேலே