காதலிப்பது வேலையாகி போனதோ
பட்டினியாய் திரிந்திருந்தால்
வயது பசி தெரிந்திருக்க
மாட்டேன். ........
அடி வயிறு காய்ந்திருந்தால்
உனக்காக வெய்யிலில் காய்ந்திருக்க
மாட்டேன்
ஓழுகும் குடிசையில் பிறந்திருந்தால்
உன்னை எண்ணி உருகி இருக்க
மாட்டேன்
கல்யாணக் கனவில் காத்திருக்கும்
ஏழைச்சகோதரி இருந்திருந்தால்
உன்னை ஏறிட்டும் பார்த்திருக்க
மாட்டேன்
சுமைகள் பல சுமந்திருந்தால்
சுகமாக உன்னை இதயத்தில் சுமந்திருக்க
மாட்டேன்
வேலைகள் அற்று திரிந்ததால்
உன்னை காதலிப்பது வேலையாகி
போனதோ.........?