என்னத்த நான் சொல்ல
மது பழக்கமே அறவே அற்ற, தமிழக முதல் அமைச்சர்கள்தான் கடந்த நாற்பதாண்டு காலமாக மாநிலம் முழுதும்
மது கடைகளை திறந்துவிட்டு, கல்லாகட்டுவதில்
கில்லாடிகளாக உலா வந்தவண்ணம் உள்ளனர் !
பணஞாயகத்தால் ஜனஞாயகம் பந்தாடப்படும்
பரிதாபத்துக்குறிய பாவப்பட்ட தேசம் இது !
தோற்றவர்கள் தோல் கொடுக்க ஆளிலில்லாமல்
வார்த்தை தேள் கடிக்கு ஆளாக்கப்படுவதும்;
ஜெயித்தவர்கள் ஆள்பவர்களின் கால்களில்
சுய லாபத்திற்காக சாஷ்ட்டாங்கமாக விழுவதும்,
தவிர்க்க முடியாத சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது !
விளம்பரம் வேண்டாமென்று எந்த தலைவனும் சொல்வதுமில்லை;
விளம்பரம் செய்யாமல் எந்த தொண்டனும்
இருப்பதுமில்லை,
கோடை காலத்தில்
தண்ணீர் பந்தல் அமைக்க ஆகும் செலவோ சில ஆயிரம்;
ஆனால் அதன்
ஆரம்ப விழாவிற்கு ஆகும் ஆடம்பர செலவோ பல ஆயிரம் !
ஆரம்பத்தில்
அனைவற்றிற்குமே அட்டகாசமான அதிரடியான நல்ல துவக்கம் !
இடைப்பட்ட, மற்றும்
இறுதி நாட்களில் அது கேட்பாரற்று கிடக்கும் கல்லறை சதுக்கம் !
இப்படித்தான் ஒவ்வொன்றும் ஒன்றை ஒன்று ஓவர் டேக் செய்துக்கொண்டுருக்கிறது
ஆட்சிமாற்றம் ஏற்படும்போது அவையாவும் கேலிகூத்தாகி
முடக்கப்பட்டு விடுகிறது
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை, எஜமானர்களுக்கு எப்போதும் கொண்டாட்டம்தான் !
ஏமாற்றுபவர்கள் திருந்தும்வரை ஏமாளிகள் எல்லோரும் கோமாளிகள்தான் !